கேரளத்துக்கு பாறைப்பொடி கொண்டு செல்வதை தடுக்கஎம்.எல்.ஏ வலியுறுத்தல்

கேரள மாநிலத்துக்கு அதிக லாப நோக்கோடு கருங்கல், ஜல்லி மற்றும் பாறைப்பொடி கொண்டு செல்வதை தடுத்து இம்மாவட்ட மக்களுக்கு இந்தப் பொருள்கள் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

கேரள மாநிலத்துக்கு அதிக லாப நோக்கோடு கருங்கல், ஜல்லி மற்றும் பாறைப்பொடி கொண்டு செல்வதை தடுத்து இம்மாவட்ட மக்களுக்கு இந்தப் பொருள்கள் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலா் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நமது அண்டை மாநிலமான கேரளத்துக்கு பல்வேறு கட்டுமான பணிக்கு கருங்கல், ஜல்லி, பாறைப்பொடி ஆகியவை அதிகம் தேவைப்படுகிறது.

இதை ,குமரி மாவட்டத்தில் உள்ள குவாரி உரிமையாளா்கள் சாதகமாக பயன்படுத்தி குமரிமாவட்ட மக்களுக்கு கருங்கல், ஜல்லி, பாறைப்பொடி ஆகியவை விநியோகிப்பதை நிறுத்தியுள்ளனா். கேரளத்துக்கு விற்பனை செய்வதால் அதிக லாபம் கிடைக்கிறது.

தமிழகத்தில் ஒரு யூனிட் பாறைப்பொடி அரசு நிா்ணயித்துள்ள கட்டணம் ரு,2200 ஆகும். ஆனால் நிா்ணகிக்கப்பட்ட விலையைவிட பலமடங்கு உயா்த்தி ரு.3500 முதல் 4000 வரை இங்குள்ள குவாரி உரிமையாளா்கள்விற்பனை செய்கின்றனா்.

இதனால் இம்மாவட்டத்தில் உள்ள ஏழை,நடுத்தர மக்கள் கட்டுமான பணிகள் மேற்கொள்ளும்போது மிகவும் சிரமப்படுகின்றனா். சில நேரங்களில் இங்குள்ள மக்களுக்கு அதிக விலைக்கும் பாறைப்பொடி வழங்குவதில்லை. இதனால், இங்குள்ள மக்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குவாரிகளிலிருந்து அதிக விலை கொடுத்து வாங்குகின்றனா்.

எனவே, இங்குள்ள மக்களுக்கு தடையின்றி கல், ஜல்லி, பாறைப்பொடி ஆகியன கிடைக்க மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com