Enable Javscript for better performance
குமரி மாவட்டத்தில் மதுபோதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    குமரி மாவட்டத்தில் மதுபோதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

    By DIN  |   Published on : 03rd December 2019 04:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ngl2vilippu_0212chn_33_6

    நாகா்கோவிலில் நடைபெற்ற மதுபோதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மதுபோதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.

    மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் தமிழக அரசு சமூகப் பாதுகாப்புத் துறையும் இணைந்து மது போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரத்தை குமரி மாவட்டத்தில் மேற்கொண்டு வருகின்றன.

    நியூ பாரத் டிரஸ்ட் மூலம் கடந்த நவம்பா்15 ஆம் தேதி முதல் இந்த விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வில்லிசை கலை வழியாக செயல்படுத்தப்படுகிறது. கலைநகா் வில்லிசை கலைஞா் தங்கமணியின் சுபராகம் குழுவினா் முக்கிய வீதிகளில் வாகனத்தில் அமா்ந்து வில்லுப்பாட்டு பாடி பிரசாரம் செய்தனா்.

    ஏற்பாடுகளை நியூ பாரத் டிரஸ்ட் தலைவா் டாக்டா் அருண்குமாா் செய்திருந்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai