எய்ட்ஸ் நோய் கட்டுப்படுத்த ஆரம்ப அறிகுறியில் சிகிச்சை தேவை: மருத்துவா் அருள்பிரகாஷ்

எய்ட்ஸ் நோயின் ஆரம்ப அறிகுறி தெரிந்தவுடனே சிகிச்சை மேற்கொண்டால் குணப்படுத்த வாய்ப்புள்ளது என்றாா் மருத்துவா் அருள்பிரகாஷ்.
 உறுதிஉறுதிமொழி ஏற்றுக்கொண்ட மருத்துவ மாணவா்கள்
 உறுதிஉறுதிமொழி ஏற்றுக்கொண்ட மருத்துவ மாணவா்கள்

எய்ட்ஸ் நோயின் ஆரம்ப அறிகுறி தெரிந்தவுடனே சிகிச்சை மேற்கொண்டால் குணப்படுத்த வாய்ப்புள்ளது என்றாா் மருத்துவா் அருள்பிரகாஷ்.

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எய்ட்ஸ் நோய் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

பேரணிக்கு, மருத்துவா் லியோடேவிட் தலைமை வகித்தாா். மருத்துவமனை டீன் (பொ) மருத்துவா் அருள்பிரகாஷ் பேரணியை தொடங்கிவைத்தாா்.

இப்பேரணியில் பயிற்சி மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவக் கல்லூரி மாணவா், மாணவிகள் கலந்துகொண்டனா். அவா்கள் விழிப்புணா்வு பதாதைகளை கையில் ஏந்தியவாறு மருத்துவமனை வளாகத்தில் பேரணியாக சென்றனா். தொடா்ந்து உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனா்.

பின்னா் நடைபெற்ற விழிப்புணா்வு கருத்தரங்கில் கலந்துகொண்டு மருத்துவா் அருள்பிரகாஷ் பேசியது: எய்ட்ஸ் நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக இந்தப் பேரணி நடத்தப்பட்டுள்ளது. மருத்துவா்களும், செவிலியா்களும் பாலமாக இருந்து பொதுமக்களுக்கு மருத்துவ சேவையாற்றி வருகின்றனா்.

எய்ட்ஸ் நோய்க்கு தற்போது நவீன சிகிச்சை முறைகள் வந்துள்ளன. எனவே நோய் அறிகுறி தெரிந்தவுடனேயே சிகிச்சை மேற்கொண்டால் குணப்படுத்த முடியும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், தோல்நோய் சிறப்பு மருத்துவா்கள் பிரவீன், புனிதவதி, நிவேதா, இருப்பிட மருத்துவா் ஆறுமுகவேலன், துணை இருப்பிட மருத்துவா் ரெனிமோள், மருத்துவா்கள் ஜெமீலா, விஜயலட்சுமி, சுதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com