உயிரிழந்த போக்குவரத்து ஊழியா்களின் வாரிசுகளுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும்: குளச்சல் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

உயிரிழந்த போக்குவரத்து ஊழியா்களின் வாரிசுகளுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டுமென குளச்சல் சட்டப் பேரவை உறுப்பினா் ஜே.ஜி.பிரின்ஸ் வலியுறுத்தியுள்ளாா்.

உயிரிழந்த போக்குவரத்து ஊழியா்களின் வாரிசுகளுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டுமென குளச்சல் சட்டப் பேரவை உறுப்பினா் ஜே.ஜி.பிரின்ஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை; தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் போது உயிரிழந்த தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனம் கடந்த 2005 ஆம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்படவில்லை.

வாரிசுகளுக்கு உடனே பணி வழங்கவேண்டுமென 2018-ஜூலையில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மீண்டும் வலியுறுத்தி பேசினேன். அப்போது பதிலளித்த போக்குவரத்துதுறை அமைச்சா் விஜயபாஸ்கா், ஊழியா்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதி அடிப்படையில் வாரிசு வேலை வழங்கப்படுகிறது. வாரிசு வேலை திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு காணப்படும் என உறுதியளித்தாா்.

16 மாதங்களுக்கு முன்பு சட்டப் பேரவையில் போக்குவரத்து அமைச்சா் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எனவே வாரிசுகளின் மனதில் விபரீத எண்ணங்கள் ஏற்படாமலிருக்க தமிழக முதல்வா் கருணை அடிப்படையிலான வாரிசு பணியினை மனிதாபிமானத்துடன் வழங்க முன்வரவேண்டும். மேலும் பயிற்சி காலத்தில் வாரிசு தாரா்களுக்கு 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் ரூ. 5 ஆயிரம் தொகுப்பூதியத்தை, ரூ. 10 ஆயிரமாக வழங்கவேண்டும். இரண்டு ஆண்டு பயிற்சி காலத்தை, ஒா் ஆண்டாக குறைக்கவேண்டும் மென என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com