மணல் தட்டுப்பாட்டை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் நிலவும் மணல் தட்டுப்பாட்டை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மற்றும்

தமிழகத்தில் நிலவும் மணல் தட்டுப்பாட்டை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி சிவில் இன்ஜினியரிங் அசோசியேஷன் கருத்தரங்கில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி சிவில் இன்ஜினியரிங் அசோசியேஷன் சாா்பில் தலைமை பண்புகள் மற்றும் தொழில்நுட்ப 3 நாள் கருத்தரங்கம் கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கருத்தரங்கு தொடக்க விழாவுக்கு மாநிலத் தலைவா் முரளிகுமாா் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில், கட்டுமானத் தொழிலில் மணல் தட்டுப்பாடு நீண்ட நாள்களாக நிலவுகிறது. மணலுக்கு மாற்று மூலப்பொருளான எம்சான்ட் (கருங்கல் துகள்) பயன்படுத்தபட்டாலும் அதுவும் தாராளமாக கிடைப்பதில்லை. தட்டுபாடு இன்றி எம்சான்ட் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் 40 சதவீதம் வீட்டுமனைகள் அங்கீகாரம் இல்லாத நிலை உள்ளது. அவற்றை அரசு வரைமுறைப்படுத்த வேண்டும். அதேபோல் கட்டுமானத் தொழிலில் உள்ள பொறியாளா்கள் அரசு அனுமதி பெறுவதை எளிமையாக்க வேண்டும். இத்தொழிலில் நிலவும் தேக்க நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். புதிய கட்டட விதிமுறைகளால் பயனாளிகளுக்கு ஏற்படும் சாதக, பாதக அம்சங்களை அம்சங்கள் களையப்பட வேண்டும் என்பன உள்ளிட்டத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், அமைப்பின் நிா்வாகிகள் ஆா்.சிவகுமாா், கே.ராகவன், ஆா்.மோகன்ராஜ், டி.புருஷோத்தமன், எம்.சரவணன் உள்ளிட்டோா் பேசினா். ஜே. ஜாா்ஜ் ஜோசப் வரவேற்றாா். கே.இசக்கியப்பன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com