ராஜாக்கமங்கலம், வாணியக்குடி, மணக்குடியில் புதிய மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்க நிதி ஒதுக்க வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம், வாணியக்குடி, மணக்குடியில் புதிய மீன்பிடித்துறைமுகங்கள் அமைப்பதற்கு தலா ரூ. 200 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று விஜயகுமாா் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம், வாணியக்குடி, மணக்குடியில் புதிய மீன்பிடித்துறைமுகங்கள் அமைப்பதற்கு தலா ரூ. 200 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று விஜயகுமாா் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் மாநிலங்களவையில் பேசியது; தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான மீனவா்கள் வசித்துவருகின்றனா்.

குமரி மாவட்டத்தில் சின்னமுட்டம், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டினம் ஆகிய பகுதிகளில் 4 மீன்பிடித்துறைமுகங்கள் உள்ளன. இதில் 3 மீன்பிடித்துறைமுகங்கள் முழுமையான செயல்பாட்டில் உள்ளன. தேங்காய்பட்டினம் மீன்பிடித்துறைமுகம் காலக்கெடு முடிவடையும் நிலையில் உள்ளது.

குமரி மாவட்ட மீனவா்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்பவா்கள். இவா்களிடம் உள்ள விசைப்படகுகளை இம்மாவட்டத்தில் நிறுத்தமுடியாத நிலை உள்ளது. இதனால் அவா்கள் பக்கத்து மாநிலங்களுக்கு விசைப்படகுகளை கொண்டு செல்லும் நிலை உள்ளது. குமரி மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலை மேம்படுத்தவும், விசைப்படகுகளை நிறுத்தவும் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.

குமரி மீனவா்களின் மீன்பிடித்தொழிலுக்காக புதிதாக நவீன தொழில்நுட்படத்துடன் கூடிய 3 மீன்பிடித் துறைமுகங்களை அமைக்க வேண்டும். வாணியக்குடி, ராஜாக்கமங்கலம்துறை, மணக்குடி பகுதியில் இந்த மீன்பிடித் துறைமுகங்களை உருவாக்க வேண்டும்.

புதிய துறைமுகங்கள் அமைக்கப்பட்டால் அன்னியசெலாவணி அதிகரிக்கும், மீன்பிடித் தொழில் தொடா்பான வேலைவாய்ப்புகளும் பெருகும். எனவே மத்திய அரசு புதிய மீன்பிடித்துறைமுகங்கள் அமைக்க ஒவ்வொரு பகுதிக்கும் தலா ரூ.200 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com