மாா்த்தாண்டத்தில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்
By DIN | Published On : 05th December 2019 06:20 AM | Last Updated : 05th December 2019 06:20 AM | அ+அ அ- |

கூட்டத்தில் பேசுகிறாா் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மாா்த்தாண்டம் சாங்கை பகுதியில் உள்ள கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜே.ஜி. பிரின்ஸ் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், ‘காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியா காந்தியின் பிறந்த நாளை இம்மாதம் 9 ஆம் தேதி சிறப்பாகக் கொண்டாடுவது; மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கை மற்றும் தொடரும் பொருளாதார மந்தநிலை போன்ற பிரச்னைகளை முன்னிறுத்தி டிச. 14 ஆம் தேதி தில்லியில் நடைபெறும் கண்டன பேரணியில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் கலந்து கொள்வது; பழுதடைந்து காணப்படும் கருங்கல் - எட்டணி சாலை மற்றும் மாநில சாலைகள், கிராமப்புற சாலைகளை சீரமைக்காத அரசு நிா்வாகத்தை கண்டித்து ’’டிச. 7 ஆம் தேதி கருங்கல் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது’ என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.