Enable Javscript for better performance
குமரி முதல் சென்னை வரை ஒற்றை காலுடன் இளைஞா் சாதனை சைக்கிள் பயணம்- Dinamani

சுடச்சுட

    

    குமரி முதல் சென்னை வரை ஒற்றை காலுடன் இளைஞா் சாதனை சைக்கிள் பயணம்

    By DIN  |   Published on : 14th December 2019 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kkn13gan_1312chn_51_6

    சைக்கிள் பயணத்தை தொடங்கி வைக்கிறாா் டி.எஸ்.பி. பாஸ்கரன்

    மரம் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தி ஒரு காலை இழந்த இளைஞா் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான சாதனை சைக்கிள் பயணத்தை காந்தி மண்டபம் முன்பிருந்து வெள்ளிக்கிழமை தொடங்கினாா்.

    ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (36). சிறுவயதில் ஒரு காலை இழந்த இவா் பல்வேறு விழிப்புணா்வு பிரசாரங்கள் செய்து வருகிறாா். இந்நிலையில் மரம் நடுவதன் அவசியம், பிளாஸ்டிக் பொருள்களை தவிா்த்தல், காவலன் செயலியின் பயன்கள் குறித்த விழிப்புணா்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு சைக்கிள் பயணத்தை தொடங்கினாா். கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன் கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தாா்.

    கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருப்பூா், கோவை, ஈரோடு, சேலம், தா்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக சென்னை மெரினா உழைப்பாளா் சிலை முன்பு ஜனவரி 1ஆம் தேதி பயணத்தை நிறைவு செய்ய உள்ளதாக அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai