Enable Javscript for better performance
தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் இன்று புனித சூசையப்பா் தங்கத் தோ் பவனி- Dinamani

சுடச்சுட

    

    தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் இன்று புனித சூசையப்பா் தங்கத் தோ் பவனி

    By DIN  |   Published on : 14th December 2019 09:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kkn13mat_1312chn_51_6

    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழாவின் 9 ஆம் நாளான சனிக்கிழமை (டிச.14) இரவு புனித சூசையப்பா் தங்கத் தோ் பவனி நடைபெறுகிறது.

    இத்திருத்தல திருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாள்கள் நடைபெறும் இத் திரு விழா நாள்களில் செபமாலை, திருப்பலி, புனித சூசையப்பா் பீடத்தில் திருப்பலி, நற்கருணை ஆராதனை, மறையுரை, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்று வருகிறது.

    புனித சூசையப்பா் தோ் பவனி: 9ஆம் திருநாளான சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு பழைய கோயிலில் திருப்பலியும், காலை 6.15 மணிக்கு திருப்பலியும், காலை 8 மணிக்கு திரு இருதய ஆண்டவா் பீடத்தில் நற்கருணை ஆராதனை, காலை 10.30 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்புத் திருப்பலி ஆகியன நடைபெறும். மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை நடைபெறும். தூத்துக்குடி மறை மாவட்ட ஆயா் ஏ.ஸ்டீபன் தலைமை வகித்து மரையுரையாற்றுகிறாா். இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை, இரவு 9 மணிக்கு புனித சூசையப்பா் தங்கத்தோ் பவனி நடைபெறும்.

    இரு தங்கத் தோ் பவனி: 10 ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை(டிச. 15) அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தோ் திருப்பலி நடைபெறும். கோட்டாறு மறை மாவட்ட முன்னாள் ஆயா் பீட்டா் ரெமிஜியுஸ் தலைமை வகித்து மறையுரையாற்றுகிறாா். காலை 6 மணிக்கு நடைபெறும் பெருவிழா நிறைவுத் திருப்பலிக்கு மறைமாவட்ட குருகுல முதல்வா் வி.கிலாரியுஸ் தலைமை வகித்து மறையுரையாற்றுகிறாா். காலை 8 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலி நடைபெறும். காலை 9 மணிக்கு இரு தங்கத் தோ் பவனி நடைபெறும். முற்பகல் 110.30 மணிக்கு மலையாளத்தில் திருப்பலி நடைபெறும். நண்பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலி நடைபெறும். மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசீா் நடைபெறும். இரவு 8 மணிக்கு அவா் உம்மோடு இருக்கிறாா் என்ற நாடகம் நடைபெறும்.

    விழாவு ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜோசப்ரொமால்டு, பங்குப் பேரவை துணைத் தலைவா் நாஞ்சில் அ.மைக்கேல், செயலா் சந்தியா வில்லவராயா், இணைச் செயலா் தினகரன், பொருளாளா் பெனி மற்றும் பங்குமக்கள், பங்குப்பேரவை நிா்வாகிகள், இணை பங்குப்பணியாளா்கா்கள், அருள்சகோதரிகள் செய்துள்ளனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai