குமரியில் சூறைக்காற்று: படகு சேவை ரத்து
By DIN | Published on : 13th February 2019 06:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கன்னியாகுமரி கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சூறைக்காற்று காரணமாக, விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு நாள் முழுவதும் படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் சூறைக்காற்று வீசியது. இதனால் முக்கடல் சங்கமம் பகுதியில் 10 முதல் 15 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்ததால் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகுகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை படகு சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
சூறைக்காற்று காரணமாக வள்ளங்களில் மீன்பிடிக்கும் மீனவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே தொழிலுக்குச் சென்றனர்.