சுடச்சுட

  

  குழித்துறையில் பிப். 15இல் பிஎஸ்என்எல் மறு இணைப்பு முகாம்

  By DIN  |   Published on : 13th February 2019 06:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமரி மாவட்டம், குழித்துறையில் பிஎஸ்என்எல் தரைவழித் தொடர்பு தொலைபேசி (லேண்ட்லைன்) மறு இணைப்பு சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 15)   நடைபெறுகிறது.
  இதுகுறித்து நாகர்கோவில் தொலைத்தொடர்பு மாவட்ட பொது மேலாளர் சஜு குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
  பி.எஸ்.என்.எல் தரைவழி இணைப்புகளில் இருந்து இரவு 10.30 மணி முதல் காலை 6 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் 24 மணி நேரமும் இந்தியாவின் எந்த ஒரு பகுதிக்கும் எந்த ஒரு நெட்வொர்க்கிற்கும் அளவில்லா அழைப்புகள் பேசும் வசதி முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 
  பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஏற்கெனவே லேண்ட் லைன் இணைப்புகளைப் பெற்று தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ள வாடிக்கையாளர்கள் மீண்டும் பி.எஸ்.என்.எல் உடன் இணைந்து இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளும் வகையில், பி.எஸ்.என்.எல் நிறுவன நாகர்கோவில் மாவட்ட நிர்வாகம் சிறப்பு மறு இணைப்பு மேளாவை பிப்.15 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை குழித்துறை தொலைபேசி நிலையத்தில் நடத்துகிறது.
  இதில், குழித்துறை, களியக்காவிளை, மூவாற்றுக்கோணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் பங்கேற்று, தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ துண்டிக்கப்பட்ட தொலைபேசி எண்களுக்கு பாக்கித்தொகை இருந்தால், பொருத்தமான சலுகை முறையில் தள்ளுபடி பெற்றுக்கொண்டு, மறு இணைப்பு பெறுவதற்கோ, பாக்கி தொகையைச் செலுத்தி கணக்கை முடித்து கொள்வதற்கோ இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும், வாடிக்கையாளர்கள் விரும்பினால் புதிதாக அறிமுகப்படுத்தபட்டுள்ள லேண்ட் லைன்  திட்டம் 129 -ல் மறு இணைப்பு பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் மாத வாடகை ரூ. 129  மட்டுமே செலுத்த வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai