சுடச்சுட

  

  நாகர்கோவிலில் பிப். 15இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

  By DIN  |   Published on : 13th February 2019 06:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகர்கோவிலில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்  வெள்ளிக்கிழமை (பிப்.15)   நடைபெறுகிறது. இது குறித்து,  கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மூ. காளிமுத்து  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
  நாகர்கோவில் கோணத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்,  பிப்.15  ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.  இம்முகாமில் குமரி  மாவட்டம் மற்றும் பிற மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் அவர்களது நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு,  டிப்ளமோ, ஐ.டி.ஐ, ஆசிரியர்கள் மற்றும் கணினிப் பயிற்சி கல்வித் தகுதியுடைய வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai