புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி முப்பெரும் விழா
By DIN | Published On : 14th February 2019 07:11 AM | Last Updated : 14th February 2019 07:11 AM | அ+அ அ- |

சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா, ஆண்டு விழா, பட்டமளிப்புவிழா ஆகிய முப்பெரும் விழா வியாழக்கிழமை (பிப்.14) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.
குமரி மாவட்ட இளைஞர் விளையாட்டுத் துறை அலுவலர் டேவிட் டானியல், கல்லூரி மைதானத்தில் விளையாட்டு விழாவை வியாழக்கிழமை தொடங்கிவைக்கிறார். வெள்ளிக்கிழமை (பிப். 15) காலை 9 மணிக்கு 21ஆவது ஆண்டுவிழா கல்லூரி அரங்கில் நடைபெறுகிறது. குழித்துறை மறை மாவட்ட ஆயரும், கல்லூரித் தலைவருமான ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் தலைமை வகிக்கிறார். கல்லூரித் தாளாளர் மரியவில்லியம் வரவேற்கிறார். கல்லூரி முதல்வர் கிறிஸ்டல் ஜெயசிங் ஆண்டறிக்கை சமர்ப்பிக்கிறார்.
சிறப்பு விருந்தினராக கோன் எலிவேட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஹெச்.ஆர். முதன்மைத் திறன் மேலாளர் காயத்ரி பங்கேற்று, பல்கலைக்கழக அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ- மாணவியருக்குப் பரிசுகள் வழங்குகிறார்.
ஆட்சி மன்றக் குழுத் தலைவரும், குருகுல முதல்வருமான ஜேசுரத்தினம் , ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். கல்லூரி நிதி காப்பாளர் அருள்பணி பிரான்சிஸ் சேவியர் நன்றி கூறுகிறார்.
பிப்.16இல் காலை 9.30 மணிக்கு 17ஆது அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெறுகிறது. ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல், பட்டம் பெற்றவர்களுக்கு பதக்கங்களும் , சான்றிதழ்களும் வழங்குகிறார். திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ்பாபு சிறப்புரையாற்றுகிறார். மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.