4 வட்டங்களில் இன்று அம்மா திட்ட சிறப்பு முகாம்
By DIN | Published On : 15th February 2019 06:19 AM | Last Updated : 15th February 2019 06:19 AM | அ+அ அ- |

தமிழக அரசின் அம்மா திட்ட முகாம், குமரி மாவட்டத்தில் 4 வட்டங்களில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அகஸ்தீசுவரம் வட்டம் வடசேரி மேற்கு வருவாய் கிராமத்துக்கு, வெட்டூர்ணிமடம் சால்வேஷன் ஆர்மி மேல்நிலைப் பள்ளிலும், தோவாளை வட்டம் அனந்தபுரம் கிராமத்துக்கு, அனந்தபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், கல்குளம் வட்டம் கப்பியறை கிராமத்துக்கு, பாத்திரமங்கலம் அரசு நடுநிலைப் பள்ளியிலும், விளவங்கோடு வட்டம் இடைகோடு கிராமத்துக்கு, கல்லுபாலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் காலை 10 மணியளவில் இம்முகாம் நடைபெறவுள்ளது. முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வருவாய் வட்டாட்சியர் அதிகாரத்திற்குள்பட்ட நில பிரச்னைகள், குடிநீர் மற்றும் சாலை வசதி போன்ற பொதுவான மனுக்களை அளித்து தீர்வு காணலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.