முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
கொட்டாரத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டம்
By DIN | Published On : 28th February 2019 06:07 AM | Last Updated : 28th February 2019 06:07 AM | அ+அ அ- |

அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக நிர்வாகிகள் கூட்டம் கொட்டாரத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு ஒன்றிய அவைத் தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் கே.முத்துசாமி, மாவட்டப் பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலர் எஸ்.வைகுண்டபெருமாள் வரவேற்றார்.
இக்கூட்டத்தில், "விருதுநகரில் மார்ச் 6இல் நடைபெறும் தென்மண்டல திமுக மாநாட்டில் திரளான தொண்டர்களுடன் பங்கேற்பது; மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவது' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், அகஸ்தீசுவரம் ஒன்றியச் செயலர் என்.தாமரைபாரதி, பேரூர் செயலர்கள் குமரி ஸ்டீபன், பாபு, காமராஜ், மாடசாமி, நிர்வாகிகள் தமிழ்மாறன், பொன்.ஜாண்சன், டி.கே.சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.