முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
வடசேரியில் அதிமுக பொதுக்கூட்டம்
By DIN | Published On : 28th February 2019 06:05 AM | Last Updated : 28th February 2019 06:05 AM | அ+அ அ- |

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தின விழாவையொட்டி, அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நாகர்கோவில் வடசேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு அதிமுக நகரச் செயலர் சந்துரு (எ) ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ ராஜன் வரவேற்றார். தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதியும், கட்சியின் அமைப்புச் செயலருமான என். தளவாய்சுந்தரம் சிறப்புரையாற்றி பேசியது: அதிமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களைப் பார்த்து ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எதற்கெடுத்தாலும் அரசை எதிர்த்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இதை தவிர அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது.
தமிழக அரசின் சாதனைத் திட்டங்கள் ஒவ்வொன்றையும் வாக்காளர்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.
அதிமுக கூட்டணியில் யார் போட்டியிட்டாலும், அவர்களுக்காக தீவிரமாக தேர்தல் பணியாற்றி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொள்ளும் அரசு விழாவில் அதிமுகவினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில், குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலர் எஸ்.ஏ.அசோகன், நடிகர் அனுமோகன், மாவட்ட நிர்வாகிகள் லதா ராமச்சந்திரன், பாக்கியலட்சுமி, தோவாளை ஒன்றியச் செயலர் கிருஷ்ணகுமார், டாக்டர் சி.என்.ராஜதுரை, மாவட்ட அணிச்செயலர்கள் ஜெயசீலன், ஹெப்சிபாய், மேரிபெல்சி, பியூலா செல்வின்குமார், நகர நிர்வாகிகள் விக்ரமன், ஜாஸ்மின்சகிலாபாய், ஜெயகோபால், கலாசெல்வன், கார்மல்நகர் தனீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.