ஒழுகினசேரி-மீனாட்சிபுரம் சாலையை சீரமைக்க கோரிக்கை
By DIN | Published On : 04th January 2019 12:35 AM | Last Updated : 04th January 2019 12:35 AM | அ+அ அ- |

நாகர்கோவிலில் பிரதான சாலைகளில் ஒன்றான ஒழுகினசேரி-மீனாட்சி புரம் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகர்கோவில் நகரில் பிரதான சாலையாக ஒழுகினசேரி-மீனாட்சிபுரம் அவ்வை சண்முகம் சாலை உள்ளது. வாகன நெரிசல் மிகுந்த இச்சாலை, தற்போது முழுமையாகப் பெயர்ந்த நிலையில் உள்ளது. எனவே, இச்சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.