மணலி சந்திப்பு - தக்கலை அஞ்சல் நிலையம் வரைமேம்பாலம் கட்டும் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்

மணலி சந்திப்பிலிருந்து தக்கலை  அஞ்சல் நிலையம் வரை மேம்பாலம் கட்ட திட்டமிட்டிருப்பதை கைவிடவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மணலி சந்திப்பிலிருந்து தக்கலை  அஞ்சல் நிலையம் வரை மேம்பாலம் கட்ட திட்டமிட்டிருப்பதை கைவிடவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து ஜார்ஜ் பொன்னையா, தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளருக்கு  வியாழக்கிழமை அனுப்பிய  மனு: மணலியிலிருந்து  தக்கலை வரை மேம்பாலம் கட்டுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இப்பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டால் வரலாற்று அழகு சிதைக்கப்படும். வியாபாரம் பாதிக்கப்படும்.    
சம்பந்தப்பட்ட மக்களின் ஆலோசனைகளை கேட்ட பிறகே எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவேண்டும்.  இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்தை கைவிடவேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com