குந்நன்விளாகம் சிவன் கோயிலில் நாளை திருவிழா தொடக்கம்

களியக்காவிளை அருகேயுள்ள குந்நம்விளாகம் அழிக்கால் ஆதிசிவன் கோயில் திருவிழாஞாயிற்றுக்கிழமை (ஜன. 6)  தொடங்கி,  ஜன. 12 வரை 7 நாள்கள் நடைபெறுகிறது.

களியக்காவிளை அருகேயுள்ள குந்நம்விளாகம் அழிக்கால் ஆதிசிவன் கோயில் திருவிழாஞாயிற்றுக்கிழமை (ஜன. 6)  தொடங்கி,  ஜன. 12 வரை 7 நாள்கள் நடைபெறுகிறது.
 விழா நாள்களில் தினமும் காலையில் சிறப்பு பூஜைகள்,  அன்னதானம்,  இரவு புஷ்பாபிஷேகம், சமய மாநாடு, கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் முதல்நாள் (ஜன. 6) காலை 8 மணிக்கு கொடிமர ஊர்வலம்   முளவறக்கோணம் இளம் பால கண்டன் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலில் இருந்து தொடங்கி களியக்காவிளை, கோழிவிளை, கூட்டப்புளி வழியாக கோயிலை வந்தடைகிறது. தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு  கோயில் தந்திரி சங்கர பட்டர் திருக்கொடியேற்றுகிறார். அன்று  இரவு 8 மணிக்கு முன்சிறை ஒன்றிய இந்துமுன்னணி தலைவர் எஸ். செல்வநாயகம் தலைமையில் சமய மாநாடு நடைபெறுகிறது. 
இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ. நம்பிராஜன், மாவட்ட துணைத் தலைவர் ஆர். ராஜேஷ்வரன் ஆகியோர் பேசுகிறார்கள்.  2 ஆம் நாள் விழாவில் காலை 8 மணிக்கு ஸ்ரீமத் பகவத்கீதா ஞான யக்ஞம் நடைபெறுகிறது. 3 ஆம் நாள் விழாவில் மாநில பாஜக விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். சசிகுமார் தலைமையில் நடைபெறும் சமய மாநாட்டில் பாஜக கோட்டப் பொறுப்பாளர் சி. தர்மராஜ், மாவட்ட பொதுச் செயலர் சி.எம். சஜூ ஆகியோர் பேசுகிறார்கள். 7 ஆம் நாள் விழாவான ஜன. 12 ஆம் தேதி பகல் 12 மணிக்கு திருக்கொடியிறக்குதல், தொடர்ந்து அன்னதானத்துடன் விழா நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com