சுடச்சுட

  

  களியக்காவிளை அருகேயுள்ள கடம்புவிளை ஸ்ரீ துர்க்கா பகவதி அம்மன், ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் திருவிழா சமய வகுப்பு மாநாடு சனிக்கிழமை (ஜன. 12) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.
  முதல் நாள் விழாவில் காலையில் சிறப்பு பூஜை,   அன்னதானம், பிற்பகல் 2 மணிக்கு சமய வகுப்பு மாணவர்களுக்கான பண்பாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது.  2 ஆம் நாள் விழாவில் காலையில் சிறப்பு பூஜைகள்,  அன்னதானம், பிற்பகல் 3 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.  கேரள மாநில திருவிளக்குபூஜை அமைப்பாளர் கே. நேசம்மாள் கோவிந்தன் இந் நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைக்கிறார். கேரள மாநில சமய வகுப்பு அமைப்பாளர் வி. கோவிந்தன், மேல்புறம் ஒன்றிய சமய வகுப்பு அமைப்பாளர் பி. டென்னிஸ், துணை அமைப்பாளர் ஜெ. ரமேஷ் ஆகியோர் பேசுகிறார்கள். 3 ஆம் நாள் விழாவில் காலை 8 மணிக்கு ஸ்ரீமத் பகவத் கீதை ஞான யக்ஞம் நடைபெறுகிறது. மதியம் அன்னதானம், மாலையில் சிறப்பு பூஜை, இரவு 8 மணிக்கு பஜனை உள்ளிட்டவை நடைபெறுகின்றன. 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai