சுடச்சுட

  

  குலசேகரம் அருகே சேக்கல் முக்கூற்றி கண்டன் சாஸ்தா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 13) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
  இக்கோயிலில் வருடாந்திர திருவிழா, தெய்வ பிரதிஷ்டை, கும்பாபிஷேகம், ஐயப்ப தீபம், பொங்கல் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அடங்கிய திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடர்ந்து 6 நாள்கள் விழா நடைபெறும். 3ஆம் நாள் விழாவான ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில்  மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். 14ஆம் தேதி திங்கள்கிழமை ஐயப்ப தீபம் ஏற்றுதல் நடைபெறுகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai