சுடச்சுட

  

  நட்டாலம் தேவசகாயம் பிள்ளை திருத்தல திருவிழா தொடக்கம்

  By DIN  |   Published on : 12th January 2019 06:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கருங்கல் அருகே உள்ள நட்டாலம் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை திருத்தல திருவிழா, வியாழக்கிழமை (ஜன.10) தொடங்கியது. இத் திருவிழா தொடர்ந்து 5 நாள்கள் நடைபெறுகிறது.
  விழாவின் முதல் நாளான வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு திருக்கொடியேற்றம், திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலிக்கு குழித்துறை மறை மாவட்ட குருகுல முதல்வர் ஜேசுரெத்தினம் தலைமை வகித்தார். திருத்துவபுரம் மறை மாவட்ட முதல்வர் புஷ்பராஜ் மறையுரையாற்றினார்.
  விழாவின் 2 ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு  மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமையில் திருப்பலி  நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற திருப்பலிக்கு, முளகுமூடு வட்டார முதல்வர் அருள்பணி ஹிலாரி தலைமை வகித்தார்.
  விழாவின் 3 ஆம் நாள் சனிக்கிழமை காலை 10 மற்றும் 12 மணிக்கு ஆங்கில திருப்பலி நடைபெறும். மாலை 6 மணிக்கு அருள்பணி மைக்கிள் விம்ஸ் தலைமையில் திருப்பலி நடைபெறும்.
  நான்காம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு அருள்பணி பெனிட்டோ தலைமையில் திருப்பலி நடைபெறும். 
  விழாவின் நிறைவு நாளான திங்கள்கிழமை காலை  8.30 மணிக்கு திருவிழா திருப்பலி, குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் தலைமையில் நடைபெறுகிறது. காலை 11.30 மற்றும் 1 மணிக்கு திருப்பலி நடைபெறும். மாலை 4 மணிக்கு தக்கலை மறை மாவட்ட ஆயர் இராஜேந்திரன் தலைமையில் திருப்பலி நடைபெறும். அதைத் தொடர்ந்து திருக்கொடியிறக்கும் அன்பு விருந்து  நடைபெறும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai