சுடச்சுட

  

  நாகர்கோவில் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  தாளாளர் டாக்டர் லாரன்ஸ் தலைமை வகித்தார்.  ஆலோசகர் மாற்றக்ரிஜோ  மற்றும் ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.  மாலையில் மாணவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுகளான கோலி, பம்பரம்விடுதல், கிளியாந்தட்டு, பானைஅடித்தல், வடம் இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் வேட்டி- சட்டை அணிந்து வந்திருந்தனர்.

  குமரி ஸ்ரீமணியா கேட்டரிங் கல்லூரியில்...

  கன்னியாகுமரி ஸ்ரீமணியா கேட்டரிங் கல்லூரியில் பொங்கல் விழா மற்றும் வேட்டி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    கல்லூரித் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன்,  சுனிதா கிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  முதல்வர் ராஜாசெல்வம் முன்னிலை வகித்தார். கல்லூரி வளாகத்தில் மாணவர்கள், கல்லூரி ஊழியர்கள் பொங்கல் வைத்தனர். இதையொட்டி, மாணவர்கள் அனைவரும் வேட்டி அணிந்து வந்திருந்தனர். இதில், பேராசிரியர் துரைப்பாண்டியன் மற்றும் ஷேக்உதுமான், சாலமன், அரவிந்த், வினோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  முளகுமூடு போப் கல்வியியல் கல்லூரியில்..
  முளகுமூடு போப் இரண்டாம் ஜாண்பால் கல்வியியல் கல்லூரியில்  பொங்கல்விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
   கல்லூரித் தாளாளர் ஜார்ஜ்பொன்னையா தலைமை வகித்து பேசினார். துணை முதல்வர்  உஷாகுமாரி  முன்னிலை வகித்தார்.  பொருளாளர் ராயல்ராஜ்  வாழ்த்துரை வழங்கினார். பயிற்சி ஆசிரியர்கள்  ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு  மாறுவேடம்,  ,  நடனப் போட்டிகள் நடத்தப்பட்டன.  முதலாம் மற்றும் இரண்டாம்  ஆண்டு பயிற்சி ஆசிரியர்கள்  கலை  நிகழ்ச்சிகளை நடத்தினர்.  இதையொட்டி, காலையில்  ஐந்து பானைகளில் பொங்கலிட்டனர்.   உறியடி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai