சுடச்சுட

  

  குழித்துறை நகராட்சிக்கு உள்பட்ட மார்த்தாண்டம் காய்கனி சந்தை, கடைகள் ரூ. 1.85 கோடிக்கு குத்தகைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
  மார்த்தாண்டம் சந்தை, கடைகளுக்கான ஏலம் குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் வைத்து, நகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தலைமையில் வெள்ளிக்கிழமை தனித்தனியாக நடைபெற்றது. 
  இதில் காய்கனி சந்தை குத்தகை உரிமம் ரூ. 46 லட்சத்துக்கும், சந்தைக்கு வரும் பொருள்கள், வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் உரிமம் ரூ. 35 லட்சத்துக்கும், வாழைக்குலை உறையிடுதல் ரூ. 5.11 லட்சத்துக்கும் ஏலம் போனது.
   இதே போன்று சந்தையில் உள்ள ஏ பிளாக், பி பிளாக், சி பிளாக், டி பிளாக் கடைகளும்  ஏலம் விடப்பட்டன. இதில் மொத்தம் ரூ. 1.85 கோடிக்கு ஏலம் போனது. மீன் சந்தை ஏலம் போகவில்லை.
  கடந்த ஆண்டு காய்கனி சந்தை, மீன்சந்தை மற்றும் கடைகள் சேர்த்து ஏலம் நடத்தப்பட்டதில் அப்போது ரூ. 79 லட்சத்துக்கு மட்டுமே ஏலம் போனதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai