சுடச்சுட

  

  மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ. 60 லட்சத்தில்  வளர்ச்சித்  திட்டப்பணிகளை விஜயகுமார் எம்.பி. தொடங்கி வைக்கிறார்.
  இது குறித்து அவரது நாகர்கோவில் முகாம் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை;  அதிமுக மாநிலங்களவை குழு செயலர் விஜயகுமார் எம்.பி. சனிக்கிழமை முதல் 3 நாள்கள் குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். 
  சனிக்கிழமை (ஜன.12)  காலை 10 மணிக்கு அகஸ்தீசுவரம் பேரூராட்சி சந்தையடியில்   ரூ. 20 லட்சத்தில் கட்டப்பட்ட திறந்தவெளி சமுதாய நலக்கூடத்தினை திறந்து வைக்கிறார். 
  ஞாயிற்றுக்கிழமை (ஜன.13) காலை 9 மணிக்கு கணபதிபுரம் பேரூராட்சியில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கபடி உள்விளையாட்டு அரங்கத்தினை அவர் திறந்து  வைக்கிறார். ஜன.14  ஆம் தேதி மாலை 6 மணிக்கு, தென்தாமரைகுளம் பேரூராட்சி, முகிலன்குடியிருப்பில்  ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினை திறந்து வைக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai