குமரி மெட்ரிக் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பயிற்சி

நாகர்கோவில், கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்,   மாணவர், மாணவிகளுக்கு  பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பயிற்சி  நடைபெற்றது.

நாகர்கோவில், கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்,   மாணவர், மாணவிகளுக்கு  பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பயிற்சி  நடைபெற்றது.
 நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் சுற்றுச் சூழல் மன்றம் இணைந்து நடத்திய இப்பயிற்சிக்கு  தாளாளர் சு. சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.  நாட்டு நலப்பணித்திட்ட உதவி அலுவலர் பிரேம் ராகுல் முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியர் மற்றும் திட்ட அலுவலர் ராஜ் திலக், பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு அமைய நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என உறுதி மொழியை வாசிக்க தொடர்ந்து மாணவர், மாணவிகள்  அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
 பின்னர் கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் கௌதம் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் மின்சிக்கனம் பற்றிய சிந்தனை ஏற்பட,  அது பற்றிய குறும்படங்கள் மூலம் விளக்கினர்.  சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் ரதி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com