சுடச்சுட

  


  கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம் பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காலாவதியான உணவுப் பொருள்களை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். 
  கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆட்சியருக்கு புகார் வந்ததையடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கருணாகரன் தலைமையில் 
  வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பிரவீன்ரகு (அகஸ்தீசுவரம்), சிதம்பரதாணு (ராஜாக்கமங்கலம்), நாகர்கோவில் நகராட்சி அலுவலர்கள் சண்முகசுந்தரம், நாகராஜன் ஆகியோர் கடற்கரைச்சாலை, முக்கடல் சங்கமம், காந்தி மண்டப சாலையிலுள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, காலாவதியான பேரீச்சை, உணவுப்பொருள்களை பறிமுதல் செய்தனர். காலாவதியான உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகள் எச்சரித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai