சுடச்சுட

  


  நாகர்கோவிலில் தனியார் ஆம்புலன்ஸ் மோதியதில் பலத்த காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தார்.
  நாகர்கோவில் கோட்டாறு வாகையடித் தெருவைச் சேர்ந்த அனைஞ்சிபிள்ளை மனைவி பகவதியம்மாள் (75). இவர், வெள்ளிக்கிழமை பறக்கை சாலை சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தபோது சுசீந்திரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ் மோதியது. இதில், பலத்த காயமடைந்த பகவதியம்மாள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 
  இதுகுறித்து, கோட்டாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai