சுடச்சுட

  


  பூதப்பாண்டி அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத பூதலிங்கசுவாமி கோயிலில் தை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
  இக்கோயிலில் ஆண்டுதோறும் தை பெருந்திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழா கொடியேற்றும் நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலையில் கணபதி ஹோமம், விநாயகர், ஸ்ரீபூதநாதர், சிவகாமிஅம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது. பின்னர், கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனை, சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில், இந்துசமய அறநிலையத்துறை இணைஆணையர் அன்புமணி, ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார், தோவாளை வட்டாட்சியர் சொக்கலிங்கம் பிள்ளை, ஸ்ரீகாரியம் சேதுராமன், கண்காணிப்பாளர் ஆறுமுகநயினார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
  மாலையில் மங்கள இசை, பக்தி மெல்லிசை நிகழ்ச்சி, இரவில் சுவாமி, அம்பாள் பூங்கோயில் வாகனத்தில் வீதியுலா ஆகியன நடைபெற்றது. திருவிழாவின் 9 ஆம் நாளான 20 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.
  கன்னியாகுமரி, ஜன. 12: கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது 
  இதையொட்டி, கோயிலில் அதிகாலையில் கணபதிஹோமம், யாகசாலை பூஜையை தொடர்ந்து கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார தீபாராதனை, அன்னதானம் ஆகியன நடைபெற்றது. இரவில் சுவாமி, அம்பாள் வீதிஉலா நடைபெற்றது. திருவிழா நாள்களில் தினமும் காலையில் யாகசாலை பூஜை, அலங்கார தீபாராதனை, அன்னதானம், பஜனை, ஆன்மிக சொற்பொழிவு, இரவில் சுவாமி, அம்பாள் வீதி உலா ஆகியன நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக்குழுவினர் செய்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai