சுடச்சுட

    

    மார்த்தாண்டத்தில் விதியை மீறி இயக்கிய 15 வாகனங்கள் பறிமுதல்

    By DIN  |   Published on : 13th January 2019 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    மார்த்தாண்டம் பகுதியில் உரிய அனுமதியின்றி இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகள் உள்பட 15 வாகனங்களை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    கன்னியாகுமரி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி வாகனங்கள் இயக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கும் புகார்கள் வந்தன. இதையடுத்து மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் க. பழனிச்சாமி தலைமையில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவில் இருந்து சனிக்கிழமை காலை வரை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். 
    இதில், மார்த்தாண்டம் அருகே அதிக பாரம் ஏற்றி வந்ததாக 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வில்லுக்குறி அருகில் கல்குவாரிகளில் இருந்து உரிய தகுதிச்சான்றுகள் இல்லாமல் ஜல்லி மற்றும் பாறைப்பொடி ஏற்றி வந்த 10 மினி லாரிகளும், கருங்கல் அருகே மூசாரி சந்திப்பில் மேற்கொண்ட சோதனையில் உரிய அனுமதியின்றி இயக்கப்பட்ட 2 கேரள மாநில ஆம்னி பேருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்த வாகனங்களுக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai