சுடச்சுட

  

  வீட்டு வாசலில் கிடந்த திருட்டுப்போன நகை: போலீஸார் விசாரணை

  By DIN  |   Published on : 13th January 2019 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  பூதப்பாண்டி அருகே திருட்டுப்போன நகையை 2 மாதங்களுக்கு பிறகு வீட்டு வாசலில் போட்டுச் சென்றது யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
  பூதப்பாண்டியை அடுத்த தெள்ளாந்தி பகுதியைச் சேர்ந்தவர் சுயம்புக்கனி. இவரது, வீட்டில் இருந்த 17 பவுன் எடையுள்ள தங்கநகை கடந்த நவம்பர் 18 ஆம் தேதி காணாமல் போனது. புகாரின்பேரில், பூதப்பாண்டி போலீஸார் அப்பகுதியைச் சேர்ந்த மூதாட்டி உள்பட இருவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதன் பிறகு, குற்றம் சாட்டப்பட்டிருந்த மூதாட்டி வீட்டில் அடுப்பு பற்ற வைத்தபோது தீயில் கருகியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இதனிடையே, வெள்ளிக்கிழமை இரவில் சுயம்புக்கனி தனது வீட்டின் முன்புற கதவை பூட்டுவதற்காகச் சென்றாராம். அப்போது, காணாமல்போன தங்க நகை வீட்டு வாசலில் இருந்ததை கண்டார். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்த அவர், வீட்டு வாசலில் இருந்த திருட்டுப் போன நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். வீட்டு வாசலில் திருட்டுப் போன நகையை விட்டுச் சென்றது யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai