கோதேஸ்வரத்தில் ஐயப்ப சங்கம விழா

மார்த்தாண்டம் அருகேயுள்ள கோதேஸ்வரம் கோயிலில் ஐயப்ப சங்கம விழா நடைபெற்றது.

மார்த்தாண்டம் அருகேயுள்ள கோதேஸ்வரம் கோயிலில் ஐயப்ப சங்கம விழா நடைபெற்றது.
குழித்துறை ஒன்றிய தர்ம ரக்ஷண சமிதி சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, அமைப்பின் ஒன்றியத் தலைவர் சுதர்சன ராஜ் தலைமை வகித்தார். இளங்கோ போற்றி பிரார்த்தனை செய்தார். மண்டல அமைப்பாளர் டி. தாமோதரன், மாவட்டச் செயலர் பி. ராஜ் மோகன்,கிருஷ்ணன் போற்றி, மாவட்ட அமைப்பாளர் ஆர். சதாசிவன், குமாரகோயில் சுவாமி பிரணவாநந்த மகராஜ் உள்ளிட்டோர் பேசினர். விழாவில், ஐயப்ப சத் சங்கம்,  அஷ்டோத்திர அர்ச்சனை, ஐயப்ப பூஜை, பிரார்த்தனை உள்ளிட்டவை நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com