அருமனை கிறிஸ்தவ இயக்க ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 24th January 2019 01:11 AM | Last Updated : 24th January 2019 01:11 AM | அ+அ அ- |

அருமனையில் கிறிஸ்தவ இயக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு இயக்கச் செயலர் சி. ஸ்டீபன் தலைமை வகித்தார். பொருளர் கென்னத், துணைத் தலைவர் ஜோஸ் செல்வன், துணைச் செயலர் சி.டி. அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் களியல் சிங், ஜான் கிறிஸ்டோபர், ஜெயராஜ், ராஜன், சுஜின் சிங், புஷ்பராஜ், டால்சன், காட்வின் கிங்ஸ்லி,காதர் மைதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற அமமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன், இயக்குநர் எஸ்.ஏ. சந்திசேகர் மற்றும் ஆயர்கள், போதகர்கள், சபை ஊழியர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கடந்த 15 ஆம் தேதி தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு கிறிஸ்தவ இயக்கச் செயலர் ஸ்டீபனை அழைத்ததற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும், அருமனை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி நவீன மருத்துவமனையாக மாற்ற வேண்டும்; ஆற்றூர்-அருமனை சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்; வேம்பனூர், பெருஞ்செல்வவிளையில் போதகர்களைத் தாக்கி அவர்களின் நெற்றியில் திருநீறு பூசிய செயலைக் கண்டிப்பது; இது சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுத்து சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குமரி மெட்ரிக் பள்ளியில்
உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சிநாகர்கோவில், ஜன. 23: நாகர்கோவில், கோட்டாறில் உள்ள குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் "உணவே மருந்து' என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆசிரியை ப. உமா தலைமை வகித்து, மாணவர்கள் பின்பற்ற வேண்டிய சத்தான உணவு பழக்க வழக்கங்கள், எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகள், முறையாக உணவினை எடுத்துக் கொள்ளும் விதம் ஆகியவை குறித்து விளக்கினார். ஆசிரியை ஜெயா தரமற்ற உணவு வகையினால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்துப் பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை தேவகி செய்திருந்தார்.