மார்த்தாண்டத்தில் விஜய் மக்கள் இயக்க ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 28th January 2019 01:35 AM | Last Updated : 28th January 2019 01:35 AM | அ+அ அ- |

குமரி மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் சபின் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சுரேஷ், மாவட்ட துணைத் தலைவர் எட்வின் அருள், மாவட்ட துணைச் செயலர் அஜின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குமரி மேற்கு மாவட்டம் முழுவதும் கிளைகள் அமைப்பது; பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட மீனவரணித் தலைவர் மனோஜ், மாவட்ட தொண்டரணித் தலைவர் லிற்று, செயலர் அலெக்ஸ், பொருளாளர் ஜெபின், அமைப்பின் ஒன்றியத் தலைவர்கள் சஞ்சீவ் (முன்சிறை), ரவி (மேல்புறம்), கிருஷ்ணகுமார் (திருவட்டாறு), சிபின் (கிள்ளியூர்), நிர்வாகிகள் வினோ ஸ்டாலின், அஜய், விஜு, சஜின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.