திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்
By DIN | Published On : 01st July 2019 07:38 AM | Last Updated : 01st July 2019 04:18 PM | அ+அ அ- |

குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்யாதபோதும் திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது.
மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை ஜூன் மாதம் 8 ஆம் தேதி தொடங்கிய நிலையில், குறிப்பிட்ட சில நாள்கள் தொடர்ந்து கன மழையாகப் பெய்தது. அதன் பிறகு மழை பெய்யாமல் வெயில் நிலவி வருகிறது. மழை பெய்தபோது திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்துக் கொட்டியது. அதன் பிறகு மிதமான அளவில் கொட்டி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை இந்த அருவிக்கு வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள், உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.