பி.எஸ்.என்.எல். அலுவலகம் இட மாற்றத்தை கைவிட வலியுறுத்தல்
By DIN | Published On : 01st July 2019 07:35 AM | Last Updated : 01st July 2019 07:35 AM | அ+அ அ- |

மார்த்தாண்டம் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையத்தை இட மாற்றம் செய்வதை கைவிட வேண்டும் என கிள்ளியூர் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலுக்கு அடுத்த பெருநகரம் மார்த்தாண்டம், குழித்துறை, நல்லூர், மாமூட்டுக்கடை, இரவிபுதூர்கடை, மேல்புறம், உண்ணாமலைக்கடை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள் மார்த்தாண்டத்தில் இயங்கி வரும் பி.எஸ்.என்.எல். சேவையை பெற்று வருகின்றனர். தற்போது இந்த அலுவலகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் குமரி மாவட்டத்தில் செயலிழந்து காணப்படுகிறது. இந்த சூழலில் பேருந்து வசதி இல்லாத இடத்திற்கு அலுவலகத்தை மாற்றம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவர்.
அலுவலக இட மாற்றத்தை கைவிடவில்லையெனில் காங்கிரஸ் சார்பில் அனைத்து பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பும் போராட்டம் நடத்தப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.