சுடச்சுட

  

  குமரியில் சாக்கடையை சீரமைக்க மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 02nd July 2019 06:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கன்னியாகுமரி பேரூராட்சியில் பராமரிப்பின்றி காணப்படும் கழிவுநீர் ஓடையை சீரமைக்க  வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
  கன்னியாகுமரிமாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பாளர் சசிஜெயபிரகாஷ், பேரவைத் தொகுதி பொறுப்பாளர் அருள்ஞானபெல், கன்னியாகுமரி நகர பொறுப்பாளர் மணிகண்டன், நிர்வாகிகள் கன்னியாகுமரி பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகனை, திங்கள்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
  மனுவில், கன்னியாகுமரி பேரூராட்சி பகுதியில் சுவாமிநாதபுரம் மகாகவி பாரதியார் சாலை, கன்னியாகுமரி சாலை குளம் திரும்பும் சாலை பகுதிகளில் உள்ள சாக்கடை கடந்த  சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி காணப்படுகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடுகள் உருவாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. ஆகவே, பொதுமக்கள் நலன்கருதி சாக்கடையை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai