சுடச்சுட

  

  கன்னியாகுமரியில் மாவட்ட  நாயர் சேவை சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. 
  இக்கூட்டத்துக்கு, அமைப்பின் மாவட்டத் தலைவர் ஸ்ரீகுமாரன் நாயர் தலைமை வகித்தார். செயலர் ஸ்ரீகண்டன், இணைச்செயலர் அசோக், பொருளாளர் தங்கபாஸ்கர், துணைத்தலைவர் ராஜசேகரன் நாயர், ஒருங்கிணைப்பாளர்கள்  சசிதரன்நாயர், ஸ்ரீகுமார், ராமசந்திரன், ஸ்ரீ ஐயப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  கன்னியாகுமரி மாவட்டத்தின் 120 ஆவது கிளை தொடங்கப்பட்டது. கன்னியாகுமரி கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  தலைவராக சுரேஷ்குமார், செயலராக ராஜசேகரன்நாயர், பொருளாளராக தாமோதரன்நாயர், துணைத்தலைவராக ராமகிருஷ்ணகுமார், வினுகுமார், துணைச்செயலர்களாக ராஜேஷ், சுதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
  இக்கூட்டத்தில், கன்னியாகுமரியில் நாயர் சமுதாயத்துக்கு தனியாக தகன மையம் அமைக்க வேண்டும்; புதிதாக சமுதாய நலக் கூடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai