சுடச்சுட

    

    கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே மாணவியை கடத்தியதாக இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.
    கருங்கல் பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவியை கடந்த சில நாள்களாக காணவில்லையாம். மாணவியின் பெற்றோர்,  உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம். புகாரின்பேரில், கருங்கல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
    மாணவி பயன்படுத்திய செல்லிடப்பேசியை வைத்து ஆய்வு செய்ததில், அவர் கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் குறிப்பிட்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு பலமுறை பேசியது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் கர்நாடக மாநில போலீஸார் உதவியுடன்அங்கு சென்று  விசாரித்தனர். அதில், மாணவியை கடத்திச் சென்றது குடகு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஜெயராமன் (21) என்பது தெரியவந்தது. ராஜபாளையத்தைச் சேர்ந்த ஜெயராமன், குடும்பத்துடன் கர்நாடக மாநிலத்தில் வசித்து வருகிறாராம். முகநூல் மூலம் நண்பர்களான இருவரும் காதலித்து வந்ததும் அண்மையில் கருங்கல் வந்த ஜெயராமன், மாணவியை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
    கருங்கல் போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து ஜெயராமனை கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai