மார்த்தாண்டம் அருகே கடை பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் திருட்டு

மார்த்தாண்டம் அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மார்த்தாண்டம் அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மார்த்தாண்டம் அருகே பயணம் பகுதியைச் சேர்ந்தவர் நேசை யன் (51). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். திங்கள்கிழமை இரவு விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டிச் சென்றார். செவ்வாய்க்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். கடையினுள் சென்று பார்த்தபோது, அங்கு வைத்திருந்த ரூ. 20 ஆயிரத்தை மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து நேசையன் அளித்த புகாரின் பேரில், மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.  வேட்டி, சட்டை அணிந்த நபர், தலையில் துண்டை போட்டு மறைத்தவாறு திருட்டில் ஈடுபட்டது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அக்காட்சிகள் மூலம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com