அருமனையில் போலி நகையை அடகு வைக்க முயற்சி: இளைஞர் கைது
By DIN | Published On : 05th July 2019 12:45 AM | Last Updated : 05th July 2019 12:45 AM | அ+அ அ- |

அருமனையில் தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகையை அடகு வைக்க வந்த இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
களியக்காவிளை அருகேயுள்ள மலையடியைச் சேர்ந்தவர் பெர்லின் ஜான் (24). இவர், அருமனையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 9 பவுன் நகையை அடகு வைக்க வந்துள்ளார். அப்போது நகை மதிப்பீட்டாளர் நகையை சோதித்த போது, அது போலி நகை என்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் அருமனை போலீஸார் வந்து பெர்லின் ஜானை கைது செய்தனர்.