குமரி விவேகானந்தர் கேந்திரத்தில் அன்னபூஜை
By DIN | Published On : 05th July 2019 12:47 AM | Last Updated : 05th July 2019 12:47 AM | அ+அ அ- |

சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தை முன்னிட்டு, விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள காஞ்சி அரங்கத்தில் அன்ன பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலை 10 மணிக்கு கேந்திர ஊழியர்கள் சார்பில் பிரார்த்தனை நடைபெற்றது. விவேகானந்த கேந்திர அகில பாரத துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பொருளாளர் அனுமந்தராவ் முன்னிலை வகித்தார். கேந்திர மூத்த ஊழியர் கிருஷ்ணமூர்த்தி ஆசியுரை வழங்கினார். அன்னபூஜைக்கான அரிசியை கேந்திர தொண்டர்கள் செங்கோட்டை மணி மகேஷ்வரன், செல்லத்துரை வழங்க, அகில பாரத பொதுச் செயலர் பானுதாஸ் பெற்றுக் கொண்டார்.
கேந்திர கிராம முன்னேற்ற திட்டச் செயலர் அய்யப்பன் அன்ன பூஜையின் சிறப்புகள் குறித்துப் பேசினார்.
இதற்காக நெல்லை, குமரி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களிடமிருந்து, கேந்திர கிராம முன்னேற்ற தொண்டர்களால் நன்கொடையாக 20 டன் அரிசி பெறப்பட்டிருந்தது. இதில் 10 டன் அரிசியை மலை போல் குவித்து வைத்து அன்னபூஜை நடைபெற்றது. பிற்பகல் 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு விவேகானந்த கேந்திர ஊழியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.