மார்த்தாண்டம் அருகே மது விற்ற முதியவர் கைது
By DIN | Published On : 08th July 2019 12:25 AM | Last Updated : 08th July 2019 12:25 AM | அ+அ அ- |

மார்த்தாண்டம் அருகே மதுபானத்தை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட முதியவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மார்த்தாண்டம் காவல் உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் தலைமையிலான போலீஸார், பள்ளியாடி அருகே வாழைத்தோட்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த முதியவரை பிடித்து விசாரித்ததில், அவர் அப்பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (60) என்பதும், மதுபானத்தை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த 20 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.