சுடச்சுட

  

  குலசேகரம் அருகே ஆபத்தான நிலையில் உள்ள கால்வாய் பாலத்தை சீரமைக்க  வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  பேச்சிப்பாறை அணையின் கால்வாயான கோதையாறு இடது கரைக் கால்வாயில் குலசேகரம் அருகே அரியாம்பகோடு பகுதியில் இரும்புப்  பாலம் உள்ளது. இப்பாலம் போதிய வகையில் பராமரிக்கப்படதால் துருப்பிடித்து உடையும் நிலையில் உள்ளது. 
  இந்த  பாலம் அமைந்துள்ள பகுதியில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில்,  இப்பாலத்தைக் கடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள்,  பள்ளி மாணவ, மாணவியர்  அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர்.  எனவே இப்பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்டித் தர பொதுப்பணித்துறையினர் முன் வரவேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai