சுடச்சுட

    

    கேரளத்துக்கு கடத்த முயற்சி: 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

    By DIN  |   Published on : 11th July 2019 09:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவிலிலிருந்து கேரள மாநிலத்துக்கு ஆட்டோ மூலம் கடத்தப்பட இருந்த 500 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
    கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி  வட்டாட்சியர் என். சதானந்தன் தலைமையில் தனித்துணை வட்டாட்சியர் சு. அருள்லிங்கம், தனிவருவாய் ஆய்வாளர் ரதன்ராஜ்குமார் ஆகியோர் கொண்ட  குழுவினர் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தியபோது,  ஓட்டுநர் ஆட்டோவை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாராம். ஆட்டோவில் கேரளத்துக்கு கடத்தப்படுவதற்காக 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அரிசி கோணம் அரசுக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. ஆட்டோ ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அரிசியைக் கடத்தியவர் குறித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai