சுடச்சுட

  

  கன்னியாகுமரி மாவட்டம், தென்காளஹஸ்தி கோயிலில் ராகுகால பிரதோஷம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14)  நடைபெறுகிறது.
  நாகர்கோவிலில் இருந்து 9 கி.மீ,. தொலைவில் உள்ள தென்காளஹஸ்தி கோயில் ராகு, கேது பரிகார தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) ராகுகால பிரதோஷம் நடைபெறுகிறது. இதையொட்டி, கோயிலில் காலையில் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.
  பகல் 12  மணிக்கு ராகு, கேதுவுக்கு ஹோமம், 9 வகையான அபிஷேகங்கள் செய்து அலங்கரித்து ராகு கேது தோஷம் உள்ளவர் களுக்கு ஹோம வழிபாடு, தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு காளத்தியப்பர், நந்தி பகவானுக்கு அபிஷேகம், அலங்கார   தீபாராதனை, அதனைத் தொடர்ந்து ராகு, கேதுவிற்கு ஒரே நேரத்தில் அபிஷேகம் அலங்காரம் ஆகியவை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பக்தர்கள் சேவா சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai