சுடச்சுட

  

  நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 12)  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
  இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் ம. மரியசகாய ஆண்டனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:   நாகர்கோவில் கோணத்தில் உள்ள  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில்  கன்னியாகுமரி  மாவட்டம் மற்றும் பிற மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரில் வந்து தங்களுடைய நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். 
    இந்த  வேலைவாய்ப்பு முகாமில் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு,  டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம்.  தனியார் துறையில் வேலைக்கு தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai