Enable Javscript for better performance
"குடிநீர் கிடைப்பதில் பிரச்னைகள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம்'- Dinamani

சுடச்சுட

    

    "குடிநீர் கிடைப்பதில் பிரச்னைகள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம்'

    By DIN  |   Published on : 13th July 2019 08:05 AM  |   அ+அ அ-   |    |  

    குமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களுக்கு குடிநீர் கிடைப்பதில் பிரச்னைகள் இருந்ததால் கண்காணிப்பு மையங்களில்  புகார் செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர்  பிரசாந்த் மு. வடநேரே தெரிவித்துள்ளார்.
     இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 95 கிராம ஊராட்சிகளிலும்,  பொதுமக்களுக்கு சீராக  குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டு குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தி தற்போது 1155 குக்கிராமங்களில்  372 குக்கிராமங்களில் தினந்தோறும் மற்றும்  783 குக்கிராமங்களில் இரண்டு நாள்களுக்கு ஒருமுறையும், ஊராட்சிக்கு உள்பட்ட நீராதாரம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
       பொதுமக்கள் தண்ணீரை தேவைக்கேற்ப சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். குடி நீர் தொடர்பாக ஏதேனும் பிரச்னைகள் தங்கள் பகுதியில் இருப்பின் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைந்துள்ள கண்காணிப்பு மையத்திற்கோ அல்லது மாவட்ட அளவிலான கண்காணிப்பு மையத்திற்கோ கீழ்கண்ட தொலை பேசி எண்களில்  புகார் தெரிவிக்கலாம்.  
    மாவட்ட அளவிலான இலவச அழைப்பு எண்: 04652  222113  குடிநீர் விநியோக கண்காணிப்பு மையங்கள்:  உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகம், நாகர்கோவில்    04652 279882. அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியம்    04652 270241.     தோவாளை ஊராட்சி ஒன்றியம்    04652 282229.     ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம்    04652 250244.     குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம்    04651 239616.     தக்கலை ஊராட்சி ஒன்றியம்    04651 248743.     திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம்    04651 283303.     கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம்     04651 235238.     முன்சிறை ஊராட்சி ஒன்றியம்     04651 235228.   மேல்புறம்  ஊராட்சி ஒன்றியம்  04651 260229 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp