குழித்துறையில் வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 13th July 2019 08:08 AM | Last Updated : 13th July 2019 08:08 AM | அ+அ அ- |

பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி குழித்துறையில் தொழில் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மார்த்தாண்டத்தில் மேம்பாலம் முடிவடையும் பம்மம் பகுதியில் பாலத்தின் இருபக்கத்திலும் அணுகு சாலையினை அகலப்படுத்தி, பேருந்துகளை அணுகு சாலை வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; புதிய பேருந்து நிலைய சாலையை சீரமைக்க வேண்டும்; காந்தி மைதானத்தில் கழிப்பறை வசதி மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்த்தாண்டம் தொழில் வர்த்தகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குழித்துறை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் அல் அமீன் தலைமை வகித்தார். செயலர் பி. ராஜா செல்வின்ராஜ், துணைச்செயலர் கே. சுந்தர்ராஜ், செயற்குழு உறுப்பினர்கள் அனில்குமார், ரமேஷ்குமார், தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு வர்த்தகர் சங்க பேரமைப்பின் மாவட்டச்செயலர் ரவி, பொருளாளர் பி. கோபன், சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்குமார், மத்தியாஸ், எட்வர்ட் ஸ்மித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையொட்டி, மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் ஒரு சில கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தன.