புதை சாக்கடை பள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து:  நாகர்கோவிலில் போக்குவரத்து நெரிசல்

நாகர்கோவில்  புதை சாக்கடைத் திட்டத்திற்காக குழாய் பதிக்கப்பட்ட  இடத்தில் அரசுப் பேருந்து  சிக்கியதில்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நாகர்கோவில்  புதை சாக்கடைத் திட்டத்திற்காக குழாய் பதிக்கப்பட்ட  இடத்தில் அரசுப் பேருந்து  சிக்கியதில்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நாகர்கோவிலில் பீச்ரோடு சந்திப்பு முதல் ஈத்தாமொழி வரை புதை சாக்கடைத் திட்டத்திற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. குழாய் பதிக்கப்பட்ட பின்னர்  சாலையை முறையாக  சீரமைக்கவில்லை. இதனால் இச்சாலை வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி சாலையில் புதைந்து விடுகின்றன.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் இச்சாலை வழியாகச் சென்ற அரசுப் பேருந்து திடீரென பள்ளத்தில் புதைந்து விட்டது. இதையடுத்து சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பொதுமக்களும், பயணிகளும் இந்தப் பேருந்தை பள்ளத்திலிருந்து மீட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டது.
இந்நிலையில் புதை சாக்கடைத் திட்டத்திற்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்களை சரிவர  சீரமைத்து பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிடுகளுக்கும் ஏற்பட்டு வரும் இடையூறுகளுக்கு முடிவு காணவேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com